தேனி மாவட்டம்,சுருளி அருவியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க, மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.பால் கூட்டுறவு தணிக்கை துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களை விடுவிக்க வேண்டும் என்ற பதிவாளர் சுற்றறிக்கையை உடனே அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க, மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் பழனியம்மாள் தலைமைதாங்கினார். மாநில செயலாளர் நவநீதகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் விஷ்வன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் அஞ்சலி தீர்மானம் வசித்தார்.
மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் முத்துக்குமார் வாழ்த்தி பேசினர்.
மாநிலத் தலைவர்கள் விஜயராமலிங்கம், மாரியப்பன், மாநில செயலாளர் வினோத் ராஜா மனோகரன் விஜயன் சிவ பழனி சந்திர போஸ் சாங் டேனியல் ராஜ், மாநில மகளிர் துணைக் குழு அமைப்பாளர் தேவி சோனா தீர்மானங்களை முன்மொழிந்தனர்.
கூட்டத்தில், கூட்டுறவு துறை தேர்தல் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் தான் நடைபெற வேண்டும், துறை அலுவலர்களுக்கு வாகன வசதி இல்லாததால் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டு வருகின்றது, எனவே துணைப் பதிவாளர், இணைப்பதிவாளர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும்,அரசு விரைந்து வாகன வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
பால் கூட்டுறவுத் தணிக்கை துறையில் பணிபுரியும் பணியாளர்கள் மூன்று வருடங்களுக்கு மேலாக பணிபுரிவதால் அந்த துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு என்பது கேள்விக்குறியாக உள்ளது, பால்வளத்துறை தணிக்கை பிரிவில் உள்ள பணியாளர்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற பதிவாளர் சுற்றறிக்கையை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர். மாவட்டச் செயலாளர் மாரிமுத்து நன்றி கூறினார்.
No comments:
Post a Comment