• Breaking News

    பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஐம்பெரும் விழா


    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இக்கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களை வரவேற்கும் விழா, நூலக திறப்பு விழா, மரக்கன்று நடும் விழா, இலவச பாடப்புத்தகம் பாடகுறிப்பீடுகள் வழங்கும் விழா, இலவச ஆதார் மைய துவக்க விழா ஆகிய ஐம்பெரும் விழா நடைபெற்றது. 

    இவ்விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா ராணி முன்னிலை வகித்தார். முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட 60 மாணவர்களையும் பாலசமுத்திரம் பகவதி அம்மன் கோவிலில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், மாவட்டக்கல்வி அலுவலர், வட்டாரக்கல்வி அலுவலர்கள் அனைவரும் மேளதாளத்துடன் வரவேற்று பள்ளிக்கு அழைத்து வந்தனர்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் பள்ளி மாணவர்களுடைய நூலகத்தை திறந்து வைத்து முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து பள்ளி மேம்பாட்டிற்காகவும் மாணவர்களின் கல்வி பாதுகாப்பு  உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும், அரசு நலத்திட்டங்களை உடனுக்குடன் மாணவர்கள் பயனடையும் வகையில்  பணிகளை ஆர்வத்துடனும்  மாணவர்களுக்கு போட்டி நடத்தி சிறப்பாக செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியர் கீதாரணி அவர்களை பாராட்டி கௌரவித்தார்கள்.

    தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடும் விழாவும் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம் வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் தொட்டியம் மேற்கு பகுதி வட்டார கல்வி அலுவலர் சேகர் வட்டார வள மைய ஆசிரியர் மதுமதி, வ உ சி சேவா சங்க பொறுப்பாளர்கள் சிதம்பரம் பிள்ளை சசிகுமார் ஊர் பெரியவர் ஓமாந்தூரார் ஆர் கே ராசு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சரவணன் செல்வி சகுந்தலா சண்முகம் பசுமை சீனிவாசன் பன்னீர்செல்வம் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

    புதிய மாணவர்களை வரவேற்கும் விழா ஏற்பாடுகளை ஆசிரியர் பொற்செல்வி திருச்சகம் அவர்களும் நூலக திறப்பு விழா ஏற்பாடுகளை கல்பனா, கல்பனா தேவி அவர்களும் மரக்கன்று நடும் விழா ஏற்பாடுகளை ஆர்த்தி ராஜலட்சுமி அவர்களும் இலவச பாடப்புத்தகம் வழங்கும் விழா ஏற்பாடுகளை சரண்யா மகேஸ்வரி அவர்களும் இலவச ஆதாரம் மைய துவக்க விழா ஏற்பாடுகளை கௌரி பங்கஜம் கலைவாணி அவர்களும் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    முன்னதாக தமிழக அரசின் இலவச ஆதார் மையத் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற ஒன்றிய குழு தலைவர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். தொட்டி மேற்கு பகுதி வட்டார கல்வி அலுவலர் சேகர் இல்லம் தேடி கல்வி மையம் ஒருங்கிணைப்பாளர் சோழமுத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்று நர் மதுமதி பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.முடிவில் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் தனசேகர் நன்றி கூறினார்.

    No comments