அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதாவது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி மதிப்பிலான சொத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து அபகரித்தது மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த 16ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த இரு வழக்குகளிலும் ஜாமீன் கோரி அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு காலை மாலை என இரு நேரங்களிலும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்திவிராஜ் என்பவருக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment