தமிழகத்தில் இன்று முதல் 12 நாட்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில் - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 31, 2024

தமிழகத்தில் இன்று முதல் 12 நாட்களுக்கு சிறப்பு வந்தே பாரத் ரயில்

 

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்றாலே ரயில் பயணிகளுக்கு கூடுதல் ஸ்பெஷல் தான். இது வழக்கமான பயணமாக இல்லாமல் சற்று வித்தியாசமானது. சொகுசு வசதிகளும் அதிவிரைவு பயணமும் ரயில் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றது. ரயில்வே துறையில் புகுந்துள்ள நவீன வசதிகள் அனைத்தையும் வந்தே பாரத் ரயிலுக்குள் கொண்டு வந்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்க அனைத்து பகுதிகளிலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு இடையே வாரம் மூன்று நாட்களுக்கு திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் வழியே 12 நாட்களுக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு ஜூலை 31 இன்று, ஆகஸ்ட் 2, 4, 7,9, 11, 14, 16, 18, 21, 23, 25 ஆகிய தேதிகளில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. மறு மார்க்கத்தில் ஆகஸ்ட் 1,3, 5, 8, 10, 12, 15, 17, 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

No comments:

Post a Comment