சூர்யகுமார் யாதவின் மேஜிக் கேப்டன்சி..... 3 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 31, 2024

சூர்யகுமார் யாதவின் மேஜிக் கேப்டன்சி..... 3 போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி......

 


நேற்று இந்தியா இலங்கை அணிகள் மோதிக்கொண்ட மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்திய அணி இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று பரபரப்பான போட்டியில் சூப்பர் ஓவரில் சூரியகுமாரின் அசத்தலான கேப்டன்ஷியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வென்றது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச முடிவு செய்தது. 

இந்திய அணியில் மொத்தம் 4 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ஆடுகளம் பந்து நன்றாக திரும்பியும் மெதுவாகவும் வந்ததால் பேட்டிங் செய்ய கடினமான ஒன்றாக இருந்தது. இதை இந்திய பேட்ஸ்மேன்கள் உணர்வதற்குள் பவர் பிளவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள்.இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 39, சஞ்சு சாம்சன் 0, ரிங்கு சிங் 1, சூரியகுமார் யாதவ் 8, சிவம் துபே 13, ரியான் பராக் 26, வாஷிங்டன் சுந்தர் 25 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் 20 ஓவர்களில் எடுத்தது. இலங்கை தரப்பில் தீக்சனா மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து விளையாடிய இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்தது. கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன் எடுக்காமல் ஆட்டம் இழந்த சஞ்சு சாம்சன் குசால் மெண்டிஸ் கொடுத்த எளிய கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். மேலும் அவருக்கு இன்னொரு கேட்ச் வாய்ப்பையும் தவறவிட்டார்.இந்த நிலையில் இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்கா 26 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த குசால் மெண்டிஸ் 42 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து இரண்டு ஓவர்களுக்கு 9 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது.யாரும் எதிர்பார்க்காத வகையில் சூரியகுமார் ரிங்கு சிங்கை பந்து வீச வைத்தார். 

அந்த ஓவரில் மூன்று ரன்கள் மட்டும் செல்ல இரண்டு விக்கெட் விழுந்தது. இதற்கடுத்து மீண்டும் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடைசி ஓவரை சூரியகுமாரே வீச இரண்டு விக்கெட்டுகள் விழ, ஐந்து ரன்கள் சென்றதால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்ய வாஷிங்டன் சுந்தர் பந்துவீசினார். அந்த ஓவரில் இரண்டு ரன்கள் கிடைக்க, அடுத்தடுத்து ரன்கள் ஏதும் எடுக்காமல் குசால் பெரேரா மற்றும் பதும் நிஷாங்கா ஆட்டம் இழந்தார்கள். மீதி 3 பந்துகள் இருக்கும் பொழுதே இலங்கை சூப்பர் ஓவர் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணிக்கும் சூப்பர் ஓவரில் முதல் பந்தில் சூரியகுமார் யாதவ் பவுண்டரி அடிக்க இந்திய அணி வென்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது.

No comments:

Post a Comment