பூவலம்பேடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்ட ஐந்து பயனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் டி.ஜெ கோவிந்தராஜன் எம்எல்ஏ - MAKKAL NERAM

Breaking

Wednesday, July 31, 2024

பூவலம்பேடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் உடனடியாக தீர்வு காணப்பட்ட ஐந்து பயனர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் டி.ஜெ கோவிந்தராஜன் எம்எல்ஏ


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப் பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட பூவலம்பேடு ஊராட்சியில் பெரியபுலியூர், ஜி ஆர் கண்டிகை, எருக்குவாய், காரணி, புதுப்பாளை யம், மங்கலம், பாலவாக்கம், ஈகுவா ர்பாளையம், கெட்டணமல்லி, பூவ லம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொது மக்களுக்காக மக்க ளுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பூவலம்பேடு ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் நடைபெற்ற இந் நிக ழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திர சேகர் தலைமை தாங்கினார்.  பூவலம்படு ஊராட்சி மன்ற தலைவர்வெங்க டாஜலபதி முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்றார்.நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாள ராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பி னரும்  டிஜே கோவிந்தராஜன் கலந்து கொண்டு மக்களுடன் முதல் வர் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக் களில் சில மனுக்களை உடனடி யாக தீர்வு காணப்பட்டு பயனாளி களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் பூவலம்பேடு ஊரா ட்சி மன்ற தலைவர் வெங்கடாசல பதி ஊராட்சிக்கு சமுதாயக்கூடம், ஆரம்ப துணை சுகாதார நிலை யம், வீட்டுமனை பட்டா, திடீர் நகர் பகுதியில் மாணவர்கள் விளையா ட்டு பூங்கா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தார். விழாவில் பஞ்சாயத்து உதவி இயக்குனர் தரணி, சேர் மேன் சிவக்குமார், துணைச் சேர் மன் மாலதி குணசேகரன், உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர் .

No comments:

Post a Comment