இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி - MAKKAL NERAM

Breaking

Monday, July 22, 2024

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் பலி

 

உத்தரபிரதேச மாநில அரசு பஸ் ஒன்று பரேலியில் இருந்து டெல்லி நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. அதேபோல டெல்லியில் இருந்து பரேலி நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு பஸ்களும் டெல்லி-பரேலி நெடுஞ்சாலையில் உள்ள கன்வாக் யாத்ரா வழித்தடத்தில் வந்த போது நேருக்கு நேர் அதிபயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனியார் பஸ் தவறான பாதையில் சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment