• Breaking News

    கோவை: தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

     

    கோவை சித்ரா அருகே சாலையில் வந்து கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து 30 பயணிகளோடு கோவை நோக்கி தனியார் குளிர்சாதன பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென்று பேருந்தில் இருந்து டீசல் வாசம் வந்துள்ளது.இதனை சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுள்ளார். இதனையடுத்து பேருந்து முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது. பயணிகளை ஓட்டுநர் சாமர்த்தியமாக இறக்கி விட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.

    No comments