இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தவர்கள் 11 பேர் கைது - MAKKAL NERAM

Breaking

Sunday, August 11, 2024

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தவர்கள் 11 பேர் கைது

 


இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 11 வங்கதேசத்தவர்களை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்தியா - வங்கதேச நாடுகள் 4,096 கி.மீ., தூரம் எல்லையை பகிர்ந்து கொண்டு உள்ளன. அந்நாட்டில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்து சம்பந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.மஹாராஷ்டிர மாநிலம் நவிமும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். போலியான ஆவணம் மூலம் இந்தியாவிற்குள் வந்த இவர்கள், வீட்டு வேலை , பெயின்ட் அடிப்பதுபோன்ற பணிகளை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment