ஆக.19ஆம் தேதி துணை முதல்வராகிறார் உதயநிதி....? சூசகமாக பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் - MAKKAL NERAM

Breaking

Friday, August 9, 2024

ஆக.19ஆம் தேதி துணை முதல்வராகிறார் உதயநிதி....? சூசகமாக பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன்



 அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டுமென்று சமீப காலமாக பல அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க உள்ளதாகவும் கடந்த சில நாட்களாகவே செய்திகளும் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு பிறகு தான் உதயநிதியை துணை முதல்வர் என கூற வேண்டும் என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தமிழ் புதல்வன் திட்ட விழாவில் பேசிய அவர், உதயநிதி துணை முதல்வர் ஆவார் என்று உறுதிப்பட கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பு உதயநிதி துணை முதல்வர் ஆகலாம் என கடந்த சில நாட்களாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment