மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்துள்ளது வில்லியநல்லூர் கிராமம் இங்குள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆடி பூரத்தையொட்டி 20-ம் ஆண்டு சக்தி கரகம் மற்றும் பால்குட திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து சக்தி கரகம்,மற்றும் பால் குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு எடுத்து சென்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்து விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர் தொடர்ந்து மகா காளியம்மனுக்கு பால் அபிசேகம் பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
No comments:
Post a Comment