தேனி: உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமுதாய இடத்தை தனிநபர் வாங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - MAKKAL NERAM

Breaking

Friday, August 9, 2024

தேனி: உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமுதாய இடத்தை தனிநபர் வாங்கிய பட்டாவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியில் உள்ள அருந்ததியர் காலனியில் சுமார் 250க்கும் மேற்பட்ட அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த காலனியில் வசிப்பவர்களுக்கு காமராஜர் ஆட்சிக்காலத்தில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமுதாயப் புலப்பத்திற்காக மூன்று சென்ட் காலியிடம் வழங்கப்பட்டுள்ளது. 

அந்த இடத்தில் வெள்ளையன் என்பவர் பொதுமக்களிடம் பேசி கறிக்கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். காலப்போக்கில் அவர் முறைகேடாக மக்களுக்கு தெரியாமல் அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து பட்டா வாங்கியதாக கூறப்படுகிறது மேலும் அந்த இடத்தினை மற்றொரு சமூகத்தைச் சார்ந்தவர்க்கு அவர் விற்று உள்ளார் எனவும் கூறப்படுகிறது தற்போது இதன் காரணமாக இரு வேறு சமூகத்திற்குள் மோதல்கள் உருவாகும் சூழ்நிலை நிலவி வருவதால் சம்பந்தப்பட்ட அந்த தனி நபர் பட்டாவினை ரத்து செய்து அதனை ஊர் மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கூறி இன்று புரட்சி தமிழர் கட்சியினருடன் இணைந்து அப்பகுதியில் இருந்து சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் முன்னதாக வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர் தங்களது கோரிக்கை அடங்கிய மனைவியை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த பணியாளர்களிடம் வழங்கி சென்றனர் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் இல்லை என்றால் தங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்து சென்றனர்.

No comments:

Post a Comment