ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு - MAKKAL NERAM

Breaking

Monday, August 12, 2024

ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்வு

 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இறக்குமதி வரி குறைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.அதன்படி 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.6,470க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.51,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.21 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5300க்கும், சவரனுக்கு ரூ.168 உயர்ந்து ரூ.42,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.87.50க்கும் ஒரு கிலோ ரூ.87,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment