அரசு கல்லூரி நிகழ்வுக்கு அழைப்பு இல்லை..... பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்..... - MAKKAL NERAM

Breaking

Monday, August 12, 2024

அரசு கல்லூரி நிகழ்வுக்கு அழைப்பு இல்லை..... பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்.....

 

பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக் கல்லூரியை முற்றுகையிட்ட பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் கருப்புக் கொடி ஏந்தி ஆதரவாளர்களின் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் காமராஜர் துறைமுகம் சார்பில் 5 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு காமராஜர் துறைமுக இயக்குனர் சுனில் பாலீவால் ஐஏஎஸ் தலைமையில் திறக்கப்பட்ட நிலையில் சட்டமன்ற உறுப்பினரை துரை சந்திரசேகர் அழைக்காததால் தனது ஆதரவாளர்களுடன் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் புகுந்து அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு காவல்துறையினர் குவிப்பு.

No comments:

Post a Comment