திருவண்ணாமலை: 6 வயது குழந்தையின் உயிரை பறித்த 10 ரூபாய் குளிர்பானம் - MAKKAL NERAM

Breaking

Monday, August 12, 2024

திருவண்ணாமலை: 6 வயது குழந்தையின் உயிரை பறித்த 10 ரூபாய் குளிர்பானம்

 


திருவண்ணாமலையில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை கடையில் விற்கப்படும் பத்து ரூபாய் மதிப்பிலான கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை வாங்கி குடித்துள்ளது. 

அதன் பிறகு சிறிது நேரத்திலேயே வாயில் நுரைத்தள்ளி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.தங்கள் குழந்தையை பறிகொடுத்து விட்டு அந்த தாயும் தந்தையும் மனம் உடைந்து காணப்படுவது காண்போரை கண் கலங்க செய்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குழந்தையின் பெற்றோர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment