சென்னை அடுத்த பல்லாவரம் பகுதி கழக அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து முன்னாள் நகரமன்ற துனைத் தலைவரும், பகுதி செயலாளருமான ஜெயபிரகாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் செங்கலபட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் இராசேந்திரன், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், டி.கே.எம்.சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், கனிகாசம்பத் ஆகியோர் கலந்து கொண்டு ஆளும் திமுக அரசு வரைமுறையற்ற வரி உயர்வு சாலைகள் முறையாக சீர்செய்வதில்லை முன்னாள் முதலமைச்சர் கொண்டு வந்த அம்மா உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை முறையாக செயல்படுத்த வில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் நகரமன்ற தலைவகள், துணைத் தலைவர்கள், பகுதி கழக நிர்வாகிகள், மகளிரணியினர் மற்றும் முடிச்சூர் நிர்வாகிகள் ஸ்ரீ பாஸ்கர், குரங்கு பாபு, தாஸ், மூர்த்தி, விஜய கணேஷ், சுவாமி நகர் ரமேஷ், சிவா, ஹரி பிரசாந்த், மஞ்சு விஜய் கணேஷ், புவனேஸ்வரி உட்பட 500 க்கும் மேற்பட்ட அதிமுகாவினர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment