முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஓராண்டாக சிறையில் இருக்கிறார். இதுவரை அவருக்கு ஜாமின் கிடைக்கவில்லை. அவரது ஜாமின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்றைய (ஆக.,12) விசாரணையின்போது, 'செந்தில் பாலாஜி விவகாரத்தில் விசாரணை எப்போது நிறைவடையும்?' என நீதிபதிகள் அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை, 'வழக்கு விசாரணை தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம். செந்தில் பாலாஜியுடன், தமிழக அரசு நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கினால் சாட்சிகளுக்கு ஆபத்து' என வாதிடப்பட்டது.
செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், '15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு, டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வழக்கின் தீர்ப்பு பொருந்தும். அவர் முன்னாள் அமைச்சர், 5 முறை எம்எல்ஏ.,வாக இருந்துள்ளார். எங்கும் தப்பிச் செல்லமாட்டார். எனவே, ஜாமின் வழங்க வேண்டும்' என வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment