ஏவிசி கல்லூரி கணிதத்துறை மாணவர் மன்ற துவக்க விழா - MAKKAL NERAM

Breaking

Sunday, August 11, 2024

ஏவிசி கல்லூரி கணிதத்துறை மாணவர் மன்ற துவக்க விழா


மயிலாடுதுறை மாவட்டம் ஏ.வி.சி கல்லூரி கணிதத்துறை ஸ்ரீநிவாச ராமானுஜன் மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது.விழாவிற்கு கணிதத் துறைத் தலைவர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் தலைமைவகித்து வரவேற்று  பேசினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் டாக்டர் ஆர்.நாகராஜன் கலந்து கொண்டு ஸ்ரீநிவாச ராமானுஜன் மாணவர் மன்றத்தை துவக்கி வைத்து தொடக்க உரையாற்றினார்.

முதுநிலை கணித மாணவர்கள் கலந்து கொண்டு "கணினி அறிவியலில் கணிதத்தின் பயன்பாடுகள்"  குறித்து பேசினார்.இறுதியாக  ஸ்ரீநிவாச ராமானுஜன் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர்.ஜே.பெரியசாமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment