மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே இராஜகோபாலபுரத்தில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் அமைந்துள்ளது.வழிபாட்டு மன்றத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் அடிகளார் அவர்களின் 84 ஆவது அவதார திருநாளை முன்னிட்டு கஞ்சிக்கலைய ஆன்மீக ஊர்வலம் விழா நடைபெற்றது.
குத்தாலம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள மன்மதீஸ்வரர் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம், முளைப்பாரி,கஞ்சி கலயம்,தலையில் சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து வழிபாட்டு மன்றத்தில் முடிவடைந்தது.அங்கு வழிபாட்டு மன்றத்தில் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று கஞ்ச காட்சி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
No comments:
Post a Comment