காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் ஊராட்சியின் திருத்தேரி கிராம பிள்ளையார் கோயில் தெருவின் சாலையை முப்பது வருடத்திற்குப் பிறகு அப்பகுதியின் சமூக ஆர்வலரும் தி.மு.க அயலக அணி மாவட்ட அமைப்பாளருமான திருத்தேரி அசு.சண்முகம் அவர்களின் முயற்சியில் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவானது 11/08/2024 காலை 9 மணிக்கு திருத்தேரி அசு.சண்முகம் முன்னிலையில் திமுக மாவட்ட பிரநிதி சி.எம்.கதிரவன் அவர்களின் தலைமையில் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியச் செயலாளர் ஆப்பூர் சந்தானம் அவர்களுடன் இணைந்து ஊராட்சி மன்ற தலைவர் துரைபாபு, துணைத் தலைவர் கே.பி.ராஜன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
உடன் தி.மு.க மூத்த நிர்வாகிகள் சுகுமார் இளைஞரனி அமைப்பாளர் ரத்தீஷ், வார்டு உறுப்பினர் சுதாகர், கண்ணன் அகிலா லல்லி அல்லாபகேஷ் பகுதி செயலாளர் மதனகோபால் கழக உடன் உறுப்பினர்கள் அல்சப்அரி மற்றும் கோவிந்தன் எஸ்.கலையரசன் நடத்துனர் ரவிச்சந்திரன் ஷாஜஹான், நாகலட்சுமி, தங்கமணி, சரவணன், கந்தசாமி, கண்ணன் ஏராளமானோர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பின்னர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.
No comments:
Post a Comment