பாஜகவும் தமிழக வெற்றிக் கழகமும் மாமன் மச்சான் கூட்டணி - அண்ணாமலை - MAKKAL NERAM

Breaking

Tuesday, August 20, 2024

பாஜகவும் தமிழக வெற்றிக் கழகமும் மாமன் மச்சான் கூட்டணி - அண்ணாமலை

 

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக பங்காளி கட்சிகள் தான். ஆனால் அந்த பங்காளிகளுடன் நாங்கள் ஒருபோதும் சேரப் போவது கிடையாது. பாஜக தலைமையில் மாமன் மச்சான் கூட்டணி அமைக்கப்படும் என்று கூறினார்.

அதன்பிறகு செய்தியாளர்கள் அவளிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கூட்டணிக்கு அழைத்தால் அவருடன் கூட்டணி வைப்பீர்களா என்று கேட்டனர். அதற்கு அவரும் மாமன் மச்சான் தான் என்று கூறினார். மேலும் நடிகர் விஜயுடன் கூட்டணி அமைப்பதை மாமன் மச்சான் கூட்டணி என்று பாஜக அண்ணாமலை கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

No comments:

Post a Comment