• Breaking News

    அறந்தாங்கி அருகே கடைமடை பகுதிக்கு வந்த காவிரி நீர்..... விவசாயிகள் மலர் தூவி வரவேற்பு


    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடி கடைமடை பகுதிக்கு வந்த காவிரி தண்ணீருக்கு விவசாயிகள் நெல்மணிகள் மற்றும் மலர்களை தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த மாதம் திறக்கப்பட்டது. தஞ்சை மாவட்டம் கல்லனையில் இருந்து கடந்த மாதம் 31 தேதி  தண்ணீர் திறக்கப்பட்டது.ஆனாலும் கூட புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கல்லணை கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததால் இம்மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படாமல் இருந்தது.

    இதனால் சம்பா சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்  சாகுபடி பணிகளை மேற்கொள்வதற்குள் தண்ணீர் வந்துவிடுமா என்று எதிர்பார்ப்போடு காத்திருந்த நிலையில்  பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கபட்டது.

    இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை காலை கடைமடை பகுதி நாகுடிக்கு வந்த காவிரி நீரை கல்லணை கால்வாய் பாசனதாரர்கள் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க  தலைவர் கொக்குமடை ரமேஷ் தலைமையில் சங்க நிர்வாகிகள்  குடிக்காடு கணேசன், பொன்.கணேசன், உதவி பொறியாளர் கந்தசாமி, பிஎம் பெரியசாமி, கவிதாஸ்ரீகாந்த், நிலையூர் சரவணன், வீரப்பன், கோவிந்தராஜ்,  சிவா, தேவேந்திரன், ரபீக்முகம்மது, அருனாசலம், தமிழ்வானன் உள்பட திரளான விவசாயிகள் நெல்மணிகள், மலர்கள் தூவியும்  மற்றும்  ஆரத்தி எடுத்தும் வரவேற்று இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய சூழலில் காவிரி நீரும் வந்து விட்டதால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் நம்பிக்கையோடு மேற்கொள்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    No comments