தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம்....? அமைச்சர்கள் ஷாக்... - MAKKAL NERAM

Breaking

Thursday, August 22, 2024

தமிழக அமைச்சரவையில் பெரிய மாற்றம்....? அமைச்சர்கள் ஷாக்...

 


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 27-ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில் அவரை துணை முதல்-அமைச்சர் ஆக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சராக இருக்கும் மெய்யநாதன் அல்லது சி.வி.கனேசன் இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட உள்ளதாகவும், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் புதிதாக அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2 முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment