இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நீட் முதுநிலை தேர்வு இன்று (ஆக., 11) காலை துவங்கியது. காலை9.30 மற்றும் , மாலை 3.30 என இரு பிரிவுகளாக எழுதுகின்றனர்.
நாடு முழுதும் அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, முதுநிலை மருந்துவ படிப்புகளுக்கான சேர்க்கை, நீட் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இதற்கான நீட் தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. தமிழகத்தில் இருந்து 25,000 பேர் உட்பட நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதுகின்றனர்.
No comments:
Post a Comment