முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம் - அண்ணாமலை - MAKKAL NERAM

Breaking

Sunday, August 11, 2024

முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம் - அண்ணாமலை

 

பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில், பனைவிதைகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தி.மு.க.,வினருக்கு தேசியக் கொடி என்றாலே பிரச்னைதான். தேசியக்கொடியை கொண்டு செல்வதால் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படப் போகிறது. பைக் பேரணி நடத்த அனுமதி மறுக்கிறது.

ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் ஏற்படுத்தும் வகையில் செய்தியை வெளியிட்டு பங்குச்சந்தையில் ஆயிரக்கணக்கான கோடியில் ஹிண்டன்பெர்க் லாபம் பார்க்கிறது. ஒரு பங்கு விலை இறங்குவதை முன்கூட்டியே கணித்து அதனை விற்று லாபம் பார்க்கிறது. உலகளவில் முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹிண்டன்பர்க் நோக்கம்.

செபி தலைவர் குறித்து ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அரசு நடவடிக்கை எடுக்கும். செபி நோட்டீஸ் கொடுத்ததற்காக அந்த நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது. ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

No comments:

Post a Comment