தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், அக்டோபர் 27ம் தேதி நடைபெற உள்ள முதல் மாநாட்டிற்கான வெற்றிக்காக, இந்த 100 அடி கொடியை திருத்தணி கோயிலில் வைத்து பூஜை செய்வதற்காக, மாடவீதியில் ஊர்வலமாக சென்றனர்.
இதற்கான முன் அனுமதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை, இந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி, கோயில் வளாகத்தில் அரசியல் கோஷங்கள் போடக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், இதற்கான அனுமதியின்றி பேரணி செல்ல முடியாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையில், 6 வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள தகவலும் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment