சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் செயலி..... தேவஸ்தானம் திட்டம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 22, 2024

சபரிமலையில் தரிசனம் செய்ய ஆன்லைன் செயலி..... தேவஸ்தானம் திட்டம்

 


ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வருகின்றன. அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மாத பூஜையில் சீசன் காலத்தை போன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

பொதுவாக தற்போது சபரிமலை கோவிலில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்களுக்கான தரிசன முன்பதிவை எளிமைப்படுத்தும் வகையில் அதற்கென்று செல்போன் செயலியை அறிமுகப்படுத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.சித்திரை ஆட்ட விசேஷ பூஜைக்காக சபரிமலை கோவில் நடை மீண்டும் வருகிற 30-ந் தேதி மாலை திறக்கப்படுகிறது. மறுநாள் அதற்கான பூஜைகள் நடத்தப்படும். அன்று இரவு நடை சாத்தப்படும். மீண்டும் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி திறக்கப்படுகிறது.

No comments:

Post a Comment