தமிழக அமைச்சரின் ரூ.400 கோடி ஊழல்..... அறப்போர் இயக்கத்தின் அறிவிப்பால் அறிவாலயம் அதிர்ச்சி...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 22, 2024

தமிழக அமைச்சரின் ரூ.400 கோடி ஊழல்..... அறப்போர் இயக்கத்தின் அறிவிப்பால் அறிவாலயம் அதிர்ச்சி......

 


தமிழக அமைச்சர் ஒருவர் மீதான ரூ.400 கோடி ரூபாய் ஊழல் புகார் ஒன்றை, ஆதாரங்களுடன் இன்று (அக்.,22) வெளியிடுவதாக அறப்போர் இயக்கம் அறிவித்துள்ளது.பல்வேறு ஊழல்களை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது அறப்போர் இயக்கம்.

 இந்த அமைப்பினரின் முயற்சியால், சமீபத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் மீது ஊழல் வழக்கு பதியப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, சிட்டிங் அமைச்சர் ஒருவர் மீதான 400 கோடி ரூபாய் ஊழல் புகாரை இன்று அம்பலப்படுத்துவதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

 அந்த அமைச்சர் யார், என்ன துறை என்கிற விபரத்தை இதுவரை வெளியிடவில்லை.தாவி தாவி அமைச்சர் ஆனவர், அரசு நிலத்தை ஆட்டையை போட்ட சம்பவம் என்று அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு, ஆளும் கட்சியினர் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment