தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 15, 2024

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு

 


வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் மற்றும் புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என்பதால் 2 நாட்களுக்கு அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அதோடு அதிதீவிர கனமழையை முன்னிட்டு 7 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் அதன்படி புதுக்கோட்டை, திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், புதுச்சேரி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment