தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - MAKKAL NERAM

Breaking

Friday, October 25, 2024

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 


தமிழ்நாட்டில் கடந்த 15ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் அதற்கு முன்பு இருந்தே மழை பெய்ய தொடங்கிவிட்டது. தற்போது பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட  பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு இன்று தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கரூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று திருச்சி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இதனால் இந்த மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.‌சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வருகிற 30-ம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழை நீடிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment