அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மன்னிப்பு கேட்டுவிடுங்கள்; இல்லையெனில் களி திங்க தயாராக இருங்கள்...... அறப்போர் இயக்கத்திற்கு தமிழ் மாநில யாதவமகாசபை எச்சரிக்கை...... - MAKKAL NERAM

Breaking

Friday, October 25, 2024

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் மன்னிப்பு கேட்டுவிடுங்கள்; இல்லையெனில் களி திங்க தயாராக இருங்கள்...... அறப்போர் இயக்கத்திற்கு தமிழ் மாநில யாதவமகாசபை எச்சரிக்கை......


 தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள *கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும் ஒட்டுமொத்த யாதவ முதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும்  R.S.ராஜகண்ணப்பன் பற்றி உண்மைக்கும் புறம்பான செய்திகளை பொது ஊடகங்களிடம் கூறி அமைச்சருக்கும் கெட்ட பெயர் வாங்கித்தர முயலும் கைக்கூலி அடிமைகளை வைத்து  அக்கப்போர் இயக்கம் நடத்தும்  இயக்கத்தின்  ஜெயராமனையும்,அவ்வப்போது நானும் உயிரோடு இருக்கிறேன் என காண்பிக்கும் பிராடு பாண்டியனையும் ,இந்த பொய்யர்க ளுக்கு துணை போகின்ற டுபாக்கூர் யூடியூப் மற்றும் சேட்டிலைட் ஊடகங்களையும் கடுமையாக எச்சரிக்கின்றோம். தொடர்ந்து பொது மக்களுக்காகவும் அவர்களின் சந்ததிகளின் நலனுக்காகவும் பாடுபட்டு உழைக்கும் அமைச்சர் கண்ணப்பன் மனதைக் காயப்படுத்த யாரிடம் கைநீட்டினீர்கள் !? பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் முன் உண்மையோ போய்யோ குற்றச்சாட்டுகூறும் புகாரை காவல்துறை நீதிமன்றம் என முறைப்படி போகாமல் வெற்று பப்ளிசிட்டிக்காக பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை அழைத்து சீன் போட்டது யார் பேச்சைக் கேட்டு!?

நிச்சயம் நீங்களும் அமைச்சரின் அல்லது அவரது மகன்களிடம் கருத்து கேட்காமல் செய்தியை வெளியிட்ட அத்தனை ஊடகங்களும் சட்டத்திற்கு முன்கைகட்டி நின்றாகவேண்டும் மறந்துவிடாதீர்கள்அ னைத்தும் பொறுமையாக சரிபார்க்கப்பட்டு முறையாக பத்திரம் செய்யப்பட்டுள்ளது என கூறும் அமைச்சர் கண்ணப்பன் சட்டம் படித்தவர் உங்களைப் போல் அசடோ கசடோ கிடையாது. எனவே அவர் வைத்துள்ள கெடுவிற்குள் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

இல்லையெனில் களி திங்க தயாராக இருங்கள். யாதவர் சமுதாயத்தையும், அமைச்சர் ராஜ கண்ணப்பனையும் அழிக்க ஒழிக்க முயல்வோர் பகவான் கிருஷ்ணரின் தண்டனைக்கு தப்பமுடியாது என அந்த கண்டன அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment