காந்தி ஜெயந்தி முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Friday, October 4, 2024

காந்தி ஜெயந்தி முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியங்களில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது


மீஞ்சூர் ஒன்றியம் கோளூர்  ஊராட்சியில் புதுச்சேரி மேடு கிராமத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் வி குமார் தலைமையில் கிராம சபை நடைபெற்றது குடிநீர் 100 நாள் வேலை ஜல் ஜீவன் திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது.

 இதில் ஊர் பொதுமக்கள் சார்பில் கழிவறை தொகுப்பு வீடுகள் தார் சாலை அமைத்துத்தர அன கோரிக்கை மனு ஊராட்சி மன்ற தலைவரும் கொடுக்கப்பட்டது இதில்துணைத் தலைவர் எஸ் ஜெயசித்ரா சிவராஜ் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் தலைமையில் நடைபெற்றது.

இதில் துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு துப்புரப் பணியாளர்களுக்கு சால்வை அனைத்து வாழ்த்து தெரிவித்தனர் காட்டூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன் தலைமையில் நடைபெற்றது  பெரிய கரும்பூர்  ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியலட்சுமி பாபு தலைமையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment