மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை ஆடுத்துள்ளது மன்னம்பந்தல் ஊராட்சி இங்கு சுமார் 1500 வீடுகள் அமைந்துள்ளது. இருப்பெரும் பாலும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள்.இந்த ஊராட்சியை மயிலாடுதுறை நகராட்சியுடன் இனைக்க அரசு ஆனை பிரப்பித்துள்ளது.இதனால் ஊராட்சியில் கிடைக்க கூடிய அரசின் வீடு கட்டும் திட்டம் கிடைக்காமல் போகும் என்றும், வீட்டு வரி, குடிநீர் வரி உயரும் என்பதால் காந்தி ஜெயந்தி அன்று நடத்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சியை நகரத்துடன் இணைப்பதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.
இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதியிடம் மனு கொடுக்க வந்தனர்.ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வராத காரணத்தால் ஊராட்சி மன்ற தலைவி பிரியா பெரியசாமி தலைமையில் 500 க்கு மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்பட்டது.
No comments:
Post a Comment