திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் புதிய உறுப்பினர்களுக்கு கட்சியின் அடையா அட்டை வழங்கும் கூட்டம் பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில் நடைபெற்றது, இக்கூட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக அதிமுக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமை வகித்தார்.
மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பி.டி.பானு பிரசாத்,மாவட்ட மாணவரணி செயலாளர் ராகேஷ், மீஞ்சூர் ஒன்றிய கழக செயலாளர் நாலூர் முத்துக்குமார்,நகர செயலாளர் பட்டாபிராமன்,செல்வகுமார்,உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும்,திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொருப்பாளராக நியமனம் செய்துள்ள சி. பொன்னையன். கலந்துகொண்டு கழக பொறுப்பாளர்களின் மத்தியில் சிறப்பு உரையாற்றினார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளரும் கவுன்சிலர்மான சுமித்ரா குமார் மீனவரணி மாவட்ட செயலாளர் மாங்கோடு மோகன். மகளிர் அணி மாவட்ட செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன் விவசாய அணி ஆறுமுகம். மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment