தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சிறப்பிக்க குத்தாலத்தில் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினர் - MAKKAL NERAM

Breaking

Friday, October 4, 2024

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு சிறப்பிக்க குத்தாலத்தில் ஆதரவாளர்கள் துண்டு பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினர்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 27 ஆம் தேதி விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர்  மாநாட்டிற்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் பகுதியில் தளபதி லோகு சிவா ஏற்பாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று திரண்டு குத்தாலம் பகுதியில் துண்டு பிரசுரங்கள் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்.

முன்னதாக சேத்திரபாலபுரம் பகுதியில் இருந்து மாவட்ட தலைவருக்கு வெடி வெடித்து சிறப்பு வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் மாநாடு நடத்துவது குறித்து மாவட்ட,ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், மகளிர் அணி சார்ந்தவர்கள், பொறுப்பாளர் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment