திமுகவை விமர்சனம் செய்த எம்பி சு.வெங்கடேசன்
ரேஷன் கடைகளில் தரமான பொருள் வழங்கக்கோரி பேனர் வைத்தால் கோபம் வருகிறதா?” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி 3 ஆயிரம் பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் பேரணி நடத்தினார். இந்த விவகாரம் மதுரையில் உள்ள திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எம்.பி. சு.வெங்கடேசனை “கண்டா வரச்செல்லுங்க” என குறிப்பிட்டு வண்டியூர் பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
இந்த போஸ்டர்கள் பின்னணியில் திமுகவினர் இருப்பதாகவே கூறப்பட்டது. இந்நிலையில், ஊமச்சிகுளத்தில் நடைபெற்ற சிபிஎம் கூட்டத்தில் பேசிய சு.வெங்கடேசன், சாலைகளை சீரமைக்க வேண்டும், ரேஷன் கடைகளில் தரமான பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் கோபம் வருவதாக திமுகவை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், நாங்கள் இங்கு தான் இருக்கிறோம், எங்களை விட சிறந்த போராட்டக்காரர்கள் இருந்தால் வாருங்கள் போட்டி போடலாம் என்றும் சு.வெங்கடேசன் கூறினார்
No comments