மோடியின் செல்லக் குழந்தையாகவும் வளர்ப்பு பிள்ளையாகவும் ஸ்டாலின் இருக்கிறார் - அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் - MAKKAL NERAM

Breaking

Saturday, November 16, 2024

மோடியின் செல்லக் குழந்தையாகவும் வளர்ப்பு பிள்ளையாகவும் ஸ்டாலின் இருக்கிறார் - அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

 


சென்னை எழும்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பேரணி நடைபெற்ற நிலையில் அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். ‌ அப்போது மேடையில் ஜெயக்குமார் பேசியதாவது, மதத்தின் பெயரால் பாஜக அரசியல் செய்கிறது‌. இந்த பாசிச மோடி அரசாங்கம் இஸ்லாமிய மக்களை அழிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சட்டங்களை இயற்றுகிறது.

 வக்பு வாரிய சட்டம் இஸ்லாமிய மக்களின் நலனுக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது அதில் திருத்தங்கள் என்ற பெயரில் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.மத்தியில் பாசிச மோடி அரசுக்கு துணை போகும் வகையில் தமிழ்நாட்டில் பாசிச திமுக அரசு இருக்கிறது. அதுதான் ஸ்டாலின் திமுக அரசு. மோடியின் செல்லக் குழந்தையாகவும் வளர்ப்பு பிள்ளையாகவும் ஸ்டாலின் இருக்கிறார். அவர் மோடியை சந்தித்த பிறகு பாஜகவுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தற்போது அமைச்சர்கள் மீதான வழக்குகள் கூட கையில் எடுக்கப்படவில்லை. தற்போது அமைச்சர்கள் மீதான வழக்குகள் கூட கையில் எடுக்கப்படவில்லை. தற்போது அமலாக்கத்துறை ரெய்டு போகாத நிலையில் அவர்கள் கை காட்டும் நபர்கள் வீட்டிற்கு மட்டும் ரெய்டு போகிறார்கள். மேலும் திமுக இத்தனை எம்பிக்களை வைத்துள்ள நிலையில் எதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு தேசிய அளவில் இட ஒதுக்கீடு குறித்து குறள் எழுப்பவில்லை என்று கேட்டார்.

No comments:

Post a Comment