மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு - MAKKAL NERAM

Breaking

Monday, December 30, 2024

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு


 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கடந்த நவம்பர் 16ம் தேதி தொடங்கி டிசம்பர் 26ம் தேதி நிறைவுபெற்றது. மண்டல பூஜை காலத்தில் சுமார் 32 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

மண்டல பூஜையை தொடர்ந்து கடந்த 26ம் தேதி இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக இன்று மாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்படுகிறது.தொடர்ந்து மகர ஜோதி நிகழ்வு ஜனவரி 14ம் தேதி நடைபெறும் நிலையில், 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. மேலும் , மகர விளக்கு பூஜைக்காக ஸ்பாட் புக்கிங் கவுன்டர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment