பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய் - MAKKAL NERAM

Breaking

Monday, December 30, 2024

பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய்

 


அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு, விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் பெண்களுக்காக விஜய் கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: கல்வி வளாக முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என் அருமை தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்ட ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும், வேதனைக்கும் ஆளாகிறேன்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும், எந்த பயனும் இல்லை என்பது தெரிந்ததே, அதற்காகவே கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம். இவ்வாறு விஜய் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment