தேர்வு நேரம்..... பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவன் - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

தேர்வு நேரம்..... பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 12 ஆம் வகுப்பு மாணவன்


 டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு பள்ளிகளுக்கு ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வருகின்றது. இதையடுத்து உடனடியாக நிபுணர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டது.

 இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று டெல்லியில் உள்ள 10 பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் பள்ளி வளாகங்களில் பல்வேறு இடங்களில் பயங்கரமான வெடிகுண்ட உள்ளதாகவும், தேர்வு நேரம் என்பதால் மாணவர்கள் அனைவரும் வகுப்பிற்குள் இருப்பார்கள், மற்ற ஆசிரியர்களும், அதிகாரிகளும் பள்ளியை சுற்றி வலம் வருவார்கள்.

இதனால் அங்கு இழப்பு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு. மின்னஞ்சலில் பெறப்பட்ட செய்தி புரளி என்று தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல்  அனுப்பியவருக்கு பள்ளியில் தேர்வு அட்டவணை குறித்து ஏனைய நடவடிக்கைகள் குறித்து தெரிந்துள்ளது. 

மேலும் ஈமெயில் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது அப்பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவர் இந்த ஈமெயிலை அனுப்பினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த மாணவனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment