எடப்பாடி பழனிச்சாமி விட்ட சவால்..... ஜெயித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..... - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

எடப்பாடி பழனிச்சாமி விட்ட சவால்..... ஜெயித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.....

 



தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தற்போது பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவத்தில் திமுக மற்றும் அதிமுக ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. முன்னதாக,  சட்டசபை கூட்டத்தொடரின் போது நேற்று எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி பல கேள்விகளை கேட்க முதல்வர் ஸ்டாலின் அசராது பதில் வழங்கினார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் யார் அந்த சார் என்று கேட்டால் அஞ்சி நடுங்குவது ஏன் என்று எடப்பாடி பழனிச்சாமி கேட்ட நிலையில் இது தொடர்பாக ஏற்கனவே சட்டசபையில் விவாதம் முடிவடைந்துவிட்டது அதற்கான பதிலை முதல்வர் ஸ்டாலின் கூறிவிட்டதால் தற்போது அதைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறினார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாகவே சவால் விட்டுள்ளார்.

அதாவது சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் புகார் கொடுத்த மறுநாளே குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் பொள்ளாச்சி சம்பவத்தில் 12 நாட்கள் கழித்து தான் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. ஒருவேளை இதனை பொய் என்று நீங்கள் நிரூபித்தால் நீங்கள் கொடுக்கும் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் சொன்னது தவறு என்று நிருபிக்க ஆதாரத்தை நீங்கள் கொடுத்தால் தண்டனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒருவேளை நீங்கள் நிரூபிக்கவில்லை எனில் ‌ நான் சொல்லும் தண்டனையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று கேட்டார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி நீங்கள் சொல்லும் கருத்து தவறானது என்று கூறி சவாலை ஏற்றுக் கொண்டார்.  இந்த நிலையில் தற்போது இருவரும் சட்டசபையில் ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதால் சவாலில் ஜெயிக்கப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 12 நாட்களுக்கு பிறகு தான் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது என்ற முதல்வர் ஸ்டாலின் கூறி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்த நிலையில் தற்போது சபாநாயகர் அப்பாவு  ஸ்டாலின் சொன்னது தான் சரி என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். மேலும் ஸ்டாலின் சொன்னபடி 12 நாட்களுக்கு பிறகு தான் பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்று சபாநாயகர் அப்பாவுக்கு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment