திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள 6000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள 6000 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது


திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட 6000 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு தனது பதவி நிறைவடைந்ததை முன்னிட்டு நன்றி கூறும் விதமாகவும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறும் விதமாகவும் பொங்கல் பரிசு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 அத்திப்பட்டு கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காலை மாலை என இரண்டு வேலையாக நிகழ்ச்சி நடைபெற்றது.காலை 3000 நபர்களும் மதியம் 3000 நபர்களும் அமர்ந்து நிகழ்ச்சியை காணும் பொருட்டு பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது மற்றும் எல்இடி டிவிகள் அமைக்கப்பட்டு பிரமாண்ட மேடையில் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேலு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.முன்னதாக தலைவருக்கு வரவேற்பு அளிக்கும் விதத்தில் நடன கலைஞர்கள் நடனமாடி வரவேற்றனர்.

 பின்பு குத்துவிளக்கு ஏற்றப்பட்டு சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.பின்னர் பொங்கலோ பொங்கல் என அனைவரும் சூரியனுக்கு பொங்கலை படைத்து பொங்கலை உண்டு மகிழ்ந்தனர்.மேடையில் 5 ஆண்டு காலம் ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற பணிகள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.


 இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்.டி.ஜி கதிர்வேல் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் அத்திப்பட்டு பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு வந்த 6000 பேருக்கும் பிரியாணி குடிநீர் தின்பண்டங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment