சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம் - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

சென்னை கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில், வாட்ஸ் அப் வழியே நுழைவுச் சீட்டு பெறும் வசதி அறிமுகம்

 



தமிழக வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவில் பொங்கல் பண்டிகை விடுமுறையின் போது எதிர்பார்க்கப்படும் கூட்டத்தை நிர்வகிக்கவும். பார்வையாளர்களுக்கு அதிக வசதியை அளிக்கவும் வாட்ஸ்அப் (Whatsapp) டிக்கெட் வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

8667609954 என்ற எண்ணுக்கு ஹாய் "Hi" செய்தியை அனுப்புவதன் மூலம் பார்வையாளர்கள் தேவையான விவரங்களைப் பதிவேற்றலாம் மற்றும் தங்களின் மொபைல் போன்களில் நேரடியாக தங்கள் நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கலாம் இந்த முயற்சியானது தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது. டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது மற்றும் பார்வையாளர்களின் திருப்திக்காக டிஜிட்டல் தீர்வுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment