ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு - MAKKAL NERAM

Breaking

Saturday, January 11, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவிப்பு


 ஈரோடு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று (ஜன.,10) தொடங்கியது. 13 மற்றும் 17ம் தேதிகள் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இந்த சூழலில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து போட்டியிட்டு வந்த நிலையில், இந்த முறை தி.மு.க., போட்டியிடுவதாக அறிவித்தது. அதன்படி, வேட்பாளராக சார்பில் மாநிலக் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமாரை தி.மு.க., தலைமை அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க., போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து முடிவு செய்ய அ.தி.மு.க., மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தி.மு.க.,வினர் ஆட்சி அதிகாரத்தைதவறாக பயன்படுத்துவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அங்கு நடந்த இடைத்தேர்தலில் தி.மு.க., அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக பழனிசாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment