திருநெல்வேலி: பாஜகவிலிருந்து மாவட்ட தலைவர்,செயலாளர் இருவரும் திடீர் விலகல் - MAKKAL NERAM

Breaking

Saturday, January 18, 2025

திருநெல்வேலி: பாஜகவிலிருந்து மாவட்ட தலைவர்,செயலாளர் இருவரும் திடீர் விலகல்

 


பாஜக கட்சியில் தற்போது  உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருக்கும் இல்லையில் புதிய தலைவர் இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்பட இருக்கிறார். இந்த நிலையில் தற்போது நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் என்பவர் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

இவர் பல வருடங்களாக பாஜகவுக்காக பணிபுரிந்து வந்த நிலையில் திடீரென கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது பாஜகவில் உட்கட்சி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் இவருடைய விலகல் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் தீவிர ஆதரவாளர். மேலும் இவர் பாஜகவில் இருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட  நிலையில் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தயா சங்கரை தொடர்ந்து அவரோடு மாவட்ட பொதுச் செயலாளராக பணிபுரிந்து வந்த வேல் ஆறுமுகம் என்பவரும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழக பாஜக கட்சியிலிருந்து தொடர்ந்து இரண்டு நிர்வாகிகள் திடீரென காரணம் சொல்லாமல் விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment