பிரபல பாடகர் வீட்டில் பயங்கர தீ விபத்து..... ஒருவர் பலி..... - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 8, 2025

பிரபல பாடகர் வீட்டில் பயங்கர தீ விபத்து..... ஒருவர் பலி.....


 பிரபல பாடகராக இருப்பவர் உதித் நாராயணன் இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார். இவர் தமிழில் ராட்சகன் என்ற படத்தில் ‘சோனியா சோனியா’ என்ற பாடலும், மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’ போன்ற பல பாடல்களை பாடி தமிழ் சினிமாவில் பிரபலமானார். இவரது மும்பையில் உள்ள அந்தேரி தெற்கு பகுதியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் காயவடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் நடைபெறும் போது பாடகர் உதித் நாராயணன் வீட்டில் இல்லை என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment