மதுரை: மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு..... விசாரணையில் காவல்துறை - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 8, 2025

மதுரை: மர்ம முறையில் இளைஞர் உயிரிழப்பு..... விசாரணையில் காவல்துறை

 


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தி உள்ள கிராமத்தில் மணியரசு, தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வேல்முருகன்(26) என்ற மகனும், தேவி(24) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் கடந்த 5ம் தேதி அன்று வீட்டில் உணவு அருந்திவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதையடுத்து கடந்த 4ம் தேதி வேல்முருகன் மயானத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து மணியரசு மற்றும் அவரது உறவினர்கள் மயானத்தில் சென்று வேல்முருகனை பார்த்த போது, அவர்கள் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment