திருட சென்ற வீட்டில் எதுவுமே கிடைக்காததால் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்று திருடன் - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 8, 2025

திருட சென்ற வீட்டில் எதுவுமே கிடைக்காததால் பெண்ணுக்கு முத்தம் கொடுத்து விட்டு சென்று திருடன்


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே மலாடு பகுதியில் 38 வயது பெண் வசித்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி அன்று தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் நுழைந்த திருடன் கதவை உள்பக்கமாக தாளிட்டு நகை கேட்டு மிரட்டி உள்ளார். ஆனால் தன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று அந்த பெண் புலம்பியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த திருடன் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணுக்கு முத்தமிட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இது குறித்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து திருடனை கைது செய்தனர். மேலும் திருட வந்த இடத்தில் நகை, பணம் ஏதும் இல்லாததால் பெண்ணிற்கு முத்தம் இட்டுச் சென்ற சம்பவம் இணையதளத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

No comments:

Post a Comment