இவன்தான் அந்த சார்.... சட்டசபைக்கு கையில் போஸ்டருடன் வந்த திமுக எம்எல்ஏக்கள் - MAKKAL NERAM

Breaking

Friday, January 10, 2025

இவன்தான் அந்த சார்.... சட்டசபைக்கு கையில் போஸ்டருடன் வந்த திமுக எம்எல்ஏக்கள்


 தமிழக சட்டசபை கூட்டத்தொடர்  இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் அதிமுக எம்எல்ஏக்கள் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி  வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக யார் அந்த சார் என்று பேட்ச் அணிந்து வந்ததோடு கையில் பதாகைகள் ஏந்தி வந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் இன்று சட்டசபை கூட்டத்தொடரின் போது திமுக கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் இவன்தான் அந்த சார் என்று போஸ்டரை கையில் ஏந்தி வந்துள்ளனர். அதாவது சென்னையில் உள்ள அண்ணா நகரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டார். இவரை அதிமுக கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்ட நிலையில் அவருடைய புகைப்படத்தையும் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்தையும் இணைத்து இவன்தான் அந்த சார் என்ற வாசகத்துடன் சட்டசபைக்கு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment