பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது - MAKKAL NERAM

Breaking

Tuesday, February 4, 2025

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது


சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட அதிமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 56வது நினைவு ஆண்டு தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.கந்தன் தலைமையில் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதனை தொடர்ந்து கழக நிர்வாகிகள் அனைவரும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். உடன் 182 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே. பி. கே. சதீஷ்குமார், வட்டக் கழக செயலாளர் வெங்கடேசன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment